வேலைநிறுத்தம் அறிவிப்பு.. விஜய், அஜித் படங்கள் உட்பட 200 படங்களின் படப்பிடிப்பு முடங்கும் அபாயம். .!
Author: Rajesh23 May 2022, 5:47 pm
திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்கள், இணையதள தொடர்கள் போன்றவற்றிற்கான படப்பிடிப்பு தற்போது அதிகளவில் நடைபெற்று வருகின்றது. இதற்காக வெளிப்புற படப்பிடிப்புக் குழு, தமிழ்நாடு தொழில்நுட்ப அமைப்பில் இருந்து தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால், ஃபெப்சி எனப்படும் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உள்ள சில தொழில்நுட்பக் கலைஞர்களின் அமைப்புகள், புதிதாக சேர்பவர்களிடம் 3 லட்சம் ரூபாய் செலுத்தி உறுப்பினர்களாக சேர வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதற்காக, நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டபடாத நிலையில், வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் வெளிப்புறப் படப்பிடிப்புக் குழுவினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதனால் விஜய், அஜித் படங்கள் உட்பட 200க்கும் அதிகமான படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், இணையதள தொடர்களின் படப்பிடிப்பு முடங்கும் நிலை உருவாகியுள்ளது.