நாங்க நினைத்திருந்தால் மோடி ஜெயிலில் இருந்திருப்பாரு ; ஆனால்… ப.சிதம்பரம் சொன்ன ரகசியம்!!

Author: Babu Lakshmanan
15 April 2024, 7:32 pm

முதலமைச்சர்களை கைது செய்து விட்டு தேர்தலை நடத்தலாம் என்பது எங்களுக்குத்தெரியவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்

சிவகங்கை அரண்மனை வாசல் அருகே இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது :- முதல்வர்களை கைது செய்து விட்டு தேர்தலை நடத்தலாம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. அதில் மோடி பேராசிரியர், நாங்கள் கத்துக்குட்டி. மேலும், நாங்கள் ஆட்சி செய்த போது முதல்வர்களை கைது செய்து சிறையில் அடைத்து தேர்தல் நடத்தி இருந்தால், மோடியும் சிறையில் இருந்திருப்பார்.

மேலும் படிக்க: அதிமுகவை பிளவுபடுத்த திட்டம் தீட்டிய பாஜக.. சபதத்தை நிறைவேற்றுவோம் ; அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்..!!

ஆனால் காங்கிரஸ் கட்சி அதை செய்யவில்லை. எங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உண்டு. நாங்கள் சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தவில்லை. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து விலைவாசி உயர்வு, வேலையின்மையை அதிகரித்த பாஜக அரசு நீடிக்கக் கூடாது. அதற்கு காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ