மறைந்தார் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள்… தள்ளாடும் வயதிலும் சாதித்த இயற்கை விவசாயி.. பிரதமர் உருக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2024, 11:12 am

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கம்மாள் என்கிற பாப்பம்மாள் (109). இவரது கணவர் ராமசாமி முதலியார்.

இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் இவரது சகோதரி நஞ்சம்மாளின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

தனது இளம் வயதிலிருந்து விவசாயம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வந்துள்ளார். அன்று முதல் தனது முதுமையான 100 வயதை கடந்தும் இவர் விவசாயம் செய்து வந்ததார்.

The 105 Year Old awarded Padma Shri for Organic Farming

இதனால் மத்திய அரசு இவரின் விவசாய ஆர்வத்தை கெளரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருது கடந்த 2021ஆம் ஆண்டு வழங்கியது. மேலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விருது வழங்கும் போது பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

மேலும் படிக்க: பத்மஸ்ரீ விருது வென்ற 107 வயது மூதாட்டி பாப்பம்மாள் காலில் விழுந்த பிரதமர் மோடி : நெகிழ்ந்த அண்ணாமலை!!

அண்மையில் இவரது 109வது வயதில் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதும் பாப்பம்மாள் பாட்டிக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வந்த பாப்பம்மாள் பாட்டிக்கு பதிலாக இவரது பேத்தி கமலம் இவரது மகள் ஜெயசுதா ஆகியோர் இந்த விருதை பெற்று கொண்டனர்.

pappammal pm modi

இதனிடையே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பாப்பம்மாள் நேற்று இரவு 8.30 மணிக்கு உயிரிழந்தார். இதனையடுத்து தேக்கம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவர் இறந்த தகவல் அறிந்து சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் திரளாக வந்து இவரது உடலுக்கு காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 243

    0

    0