ஆசை வார்த்தை கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோ சட்டத்தின் கீழ் பெயிண்டர் கைது..!!

Author: Babu Lakshmanan
2 June 2022, 1:56 pm

கோவையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டர் வேலை செய்யும் இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் பஷீர்(19) இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இதனிடையே, பஷீர் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயதான சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நேற்று கடத்திச் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தோழிகளிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், பஷீர் என்பவர் கடத்திச் சென்றதும், திருமண ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போக்சோ சட்டத்தில் பஷீரை கைது செய்த போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

  • gangers movie beat good bad ugly single day collection குட் பேட் அக்லிக்கு மூடு விழா நடத்திய கேங்கர்ஸ்? கடைசில இப்படி ஆகிடுச்சே!