அஜித் சொன்ன அந்த வார்த்தை… ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்கள் ; பகாசூரன் இயக்குநர் வெளியிட்ட ரகசியம்!!

Author: Babu Lakshmanan
6 December 2022, 9:25 pm

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மோகன் ஜி. இந்தப் படங்களின் மூலம் பெரும் சர் தற்போது இவரது இயக்கத்தில் ‘பகாசுரன்’ படம் உருவாகியுள்ளது, இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் மற்றும் நட்டி ஆகிய இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனரான செல்வராகவன் தற்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார், பீஸ்ட் படத்தில் இவரது நடிப்பு பாராட்டை பெற்றது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் செல்வராகவன் கொஞ்சம் மிரட்டலான தோற்றத்தில் சிவ பக்தர் போல காட்சியளித்திருந்தார். அந்த போஸ்டரில் இடம்பெற்றிருந்த இவரது தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில், நேற்று அந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

இது தொடர்பாக சென்னையில் தமிழ் தியாகராஜன் இயக்கத்தில் ராம் நடிக்கும் புதுப்பட பூஜையில் பங்கேற்ற இயக்குநர் மோகன்.ஜி, க்ளாப்போர்டு அடித்து அதனை தொடங்கி வைத்தார் .

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- “பகாசூரன்’ டிரைலர் 24 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. நான் கதைக்குத்தான் நாயகனைத் தேடுவேன். நாயகனுக்காக கதையை உருவாக்க மாட்டேன்.
இந்தப் படம் சேலத்தில் நடந்த உண்மைக் கதையை தழுவியது. பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்.

ஒரு நல்ல படம் அதுவாகவே விளம்பரமாகிவிடும் என்று சொல்வார் நடிகர் அஜித். அவரின் கருத்தை நான் ஏற்கிறேன். அதற்காகத்தான் ‘பகாசூரன்’ பட ட்ரைலருக்கு போஸ்டர் கூட ஒட்ட வில்லை. மேலும் ட்ரெய்லர் விழா கூட இல்லாமல் யூடியூப்பை நம்பியே வெளியிட்டேன்.

தற்போது 1 நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை எட்டியிருக்கிறது, எனக் கூறினார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!