சாலையில் இளைஞர் ஓடஓட கொடுரமாக வெட்டிக்கொலை… பழனியில் பேருந்து நிலையத்தில் பரபரப்பு… போலீசார் விசாரணையில் பகீர்

Author: Babu Lakshmanan
3 May 2023, 2:35 pm

பழனி பேருந்து நிலையம் அருகில் முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திண்டுக்கல் மாவட்டம் பழனி குரும்பபட்டியை சேர்ந்தவர் கோபால் இவருடைய மகன் வடிவேல் (29). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மே 1 தொழிலாளர் தின விடுமுறை முன்னிட்டு அவரது வீட்டிற்கு வந்து இரண்டு நாட்களாக பழனியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பழனி பேருந்து நிலையம் முன்பு நடந்து சென்ற வடிவேலை மர்ம நபர்கள் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த வடிவேலு 108 ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி வடிவேல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இது குறித்து பழனி நகர போலீசார் விசாரணை செய்து வருகின்ற நிலையில் வடிவேலு மீது ஏற்கனவே பழனி அரசு மருத்துவமனையில் புகுந்து ஒருவரை வெட்டிய வழக்கு நிலுவையில் உள்ளது என்பது விசாரணையில் தெரிய வருகிறது.

இந்நிலையில் பழனியில் முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ