பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா : அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2022, 6:04 pm

திண்டுக்கல் : பழனி பங்குனி உத்திரத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 12ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று திருக்கல்யாணமும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்றும் நடைபெற்றது.

இன்று மாலை 4.45மணிக்கு மேல் அருள்மிகு முத்துக்குமாராசாமி-வள்ளி, தெய்வானையுடன், அலங்கரிக்கப்பட்ட தேரில் பழனி அடிவாரம் வடக்குகிரிவீதியில் இருந்து நான்கு கிரிவீதிகளிலும் வலம் வந்து அருள்பாலித்தார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுக்க, அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி தெய்வயானை சமேதராக‌ தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டத்தில் பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1253

    0

    0