தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் 2-மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்..!

Author: Vignesh
24 October 2022, 3:24 pm

பழனி முருகன் கோவிலில் தீபாவளி பண்டிகை நாளில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் வருகை புரிந்தனர். வின்ச் மற்றும் ரோப் கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலை மீது சென்று வருகின்றனர். பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். மலை அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு படிப்பாதை வழியாகவும் மலை மீது சென்று வருகின்றனர்.

palani-updatenews360

மேலும், வின்ச் மற்றும் ரோப் கார் மூலமாக பக்தர்கள் மலை மீது செல்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர். மலை மீது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் செல்வதால் கட்டண தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் ஒரு மணி நேரமும், பொது தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் இரண்டு மணி நேரமும் வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.

முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்ததால் கூட்ட நெரிசலைத் தவிர்த்து விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!