‘ராஜ் பவன் ஆர்.என் ரவியே எங்கள் அமைச்சரே நீக்க நீ யார்..?’… ஆளுநருக்கு எதிராக திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
8 July 2023, 12:39 pm

பழனியில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் வழக்குகள் குறித்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ரவியை கண்டிக்கும் விதமாகவும் மத்திய அமைச்சர்கள் மேல் உள்ள வழக்குகள் குறித்தும் விபரங்கள் அடங்கிய போஸ்டர்களை பழனி நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ராஜ் பவன் ஆர்.என் ரவியே எங்கள் அமைச்சரே நீக்க நீ யார்..? என்று ஒருமையிலும் , டெல்லிக்கு செல் இவர்களை மந்திரி பதிவிலிருந்து உடனடியாக நீக்கம் செய்ய சொல் என்றும், மத்திய அமைச்சர்கள் ஸ்ரீநிதி பிரமாணிக் மீது 11 வழக்குகளும், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஜான் பார்லர் மீது 9 வழக்குகளும் வெளியுறத்துறை மத்திய அமைச்சர் முரளிதரன் மீது ஏழு வழக்குகளும், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மீது ஆறு வழக்குகளும் உள்ளது.

நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மீது ஐந்து வழக்குகளும், சுகாதாரத் துறை இணை அமைச்சர் சத்தியபால் சிங் பாகேல் மீது ஐந்து வழக்குகளும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, உணவு பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் சௌபே மீது மூன்று வழக்குகளும், உள்துறை இணையமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா மீது ஒரு வழக்குகளும் உள்ளது என்று பட்டியல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய மத்திய அமைச்சர்கள் அடங்கிய போஸ்டர்கள் பழனி பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் வளாகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Shine Tom Chacko jumps out of hotel window to escape from police during drug raid போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!