அண்ணாமலையை ஊருக்குள் நுழைய விட மாட்டோம்… திமுகவினர் எச்சரிக்கை ; பழனியில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
14 September 2023, 8:29 am

பழனி நகரில் வைக்கப்பட்டிருந்த திமுக பேனர்களை கிழித்த பா.ஜக நபரை கைது செய்யக்கோரி திமுகவினர் பழனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையை ஊருக்குள் நுழைய விட மாட்டோம் என எச்சரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு செப்டம்பர் 17 வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு வரவேற்பு தெரிவித்து பழனியில் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், மின்வாரியம் அருகில் உள்ளிட்ட பல இடங்களில் திமுகவினர் பேனர் வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு பாஜகவை சேர்ந்த மதுரை வீரன் என்பவர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனி நகர் காவல் நிலையத்தில் திமுகவினர் 50 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.

பின்னர் பேசிய நகர செயலாளர் வேலுமணி புகார் அளிக்கபட்ட பா.ஜ.கவை சேர்ந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாஜக தலைவர் அண்ணாமலையை ஊருக்குள் நுழைய விட மாட்டோம் எனவும், மீறி வந்தால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்வோம் என எச்சரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 385

    0

    0