பழனியில் யானை தந்தங்களை விற்க முயற்சி : சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தது வனத்துறை…!!!

Author: Babu Lakshmanan
14 March 2022, 1:06 pm

திண்டுக்கல் : பழனியில் யானை தந்தங்களை விற்க முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி- சவரிக்காடு பகுதியில் உள்ள வீட்டில் யானையின் தந்ததங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பழனி வனத்துறை அதிகாரி பழனிகுமார் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு அடி நீளமுள்ள தந்தம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சவரிக்காடு சேர்ந்த முத்துக்குமார் என்பவரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பாச்சலூர் மற்றும் அமரபூண்டி சேர்ந்த ராஜ் ,முத்துவேல், சிவலிங்கம், ராஜேஷ் பிரபு ஆகியோர் வனப்பகுதியில் கிடந்த யானையின் தந்தத்தை சில நாட்களுக்கு முன் எடுத்து வந்துள்ளனர். பின்னர், நண்பர்களின் உதவியுடன் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சம்மந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்த வனத்துறையினர், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1289

    0

    0