அரைகுறை ஆடையில் தூக்கில் தொங்கியபடி கிடந்த சடலம்… அலறியடித்து ஓடிய நோயாளிகள்.. அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Author: Babu Lakshmanan13 January 2023, 1:14 pm
பழனி அரசு மருத்துவமனையில் தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில், கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது மகன் சரவணபாரதி, இன்று காலை மருத்துவமனை ரத்த வங்கி பின்புறம் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
அதை கண்டு நோயாளிகள் அலறி அடித்து ஓடினர். பின்பு இது பற்றி பழனி காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சரவணபாரதியிடம் இருந்த டிரைவிங் லைசன்சில் உள்ள முகவரி மற்றும் தொலைபேசிக்கு காவல்துறை மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. முன்னதாக இவர் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வரவில்லை.
மேலும், இவர் எதற்காக மருத்துவமனைக்குள் தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரமும் தெரியவில்லை. தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றி பழனி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.