பழனியில் முருக பக்தர்களுக்கு குறி… சைலண்டாக கஞ்சா விற்பனையில் சட்டவிரோத கும்பல் ; கஞ்சா வியாபாரியை மடக்கி பிடித்த போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
29 December 2022, 11:44 am

பழனியில் கஞ்சா விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களும் அதிகளவில் பழனியில் குவிகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து அதிகளவு கஞ்சா விற்பனை நடைபெறுகிறது.

இதன்காரணமாக ரயில்நிலையம் சாலை, பேருந்து நிலையம், காந்தி ரோடு, அடிவாரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மறைமுகமாக பலர் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்த தகவல் போலீஸாருக்கு கிடைத்ததை அடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது பழனி பேருந்து நிலையம் பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்தபோது பிடிபட்டார். அவரை பிடித்து விசாரித்ததில் பழனி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த முகம்மது பீதா என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

பழனி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ள நிலையில், பழனியில் பல்வேறு வெளியூர் மற்றும் வெளகமாநிலங்களில் இருந்து மக்கள் குவிவதால், மக்களோடு மக்களாக கலந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் அடையாளம் காணமுடியாது என்பதால், பழனியை மையமாக வைத்து வெளியூரில் இருந்து வந்து கஞ்சாவை கைமாற்றும் குற்றங்களும் நடைபெறுகிறது.

பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க கஞ்சா விற்பனை முக்கிய காரணமாக உள்ளது. இன்னும் சில தினங்களில் பழனி கோவில் கும்பாபிஷேகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் என தொடர் திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில், கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடித்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • srinidhi shetty not able to act in ramayana movie because of yash பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…