பழனி அடிவாரத்தில் கிடந்த பெண் சடலம்.. பகீர் கிளப்பிய உல்லாசக் கதை!
Author: Udayachandran RadhaKrishnan27 December 2024, 6:05 pm
பழனி பகுதியை சேர்ந்தவர் பஷிராபேகம்(45). இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது கணவர் உயிரிழந்த நிலையில் அடிவாரம் சரவணப் பொய்கை சாலையில் டீக்கடை மற்றும் துணிக்கடை நடத்தி வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியில் நாவிதர் தொழில் செய்துவரும் மாரிமுத்து(45) என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்ததாகவும், சமீப காலமாக இந்த பெண் மாரிமுத்து வை விட்டுவிட்டு வேறு ஒரு நபருடன் பழக்கம் வைத்துக் கொண்டு மாரிமுத்துவை கண்டு கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது.
இதன்காரணமாக ஆத்திரமுற்ற மாரிமுத்து, இன்று காலை வழக்கம்போல கடையில் இருந்த பஷிரா பேகத்திடம் சென்று தகராறு செய்துள்ளார். மேலும் தான் வைத்திருந்த கத்தியில் பஷீராபேகத்தை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: அந்த ‘சாரை’ காவல்துறை மறைக்கிறது.. இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
இந்த சம்பவத்தில் மாரிமுத்துவுக்கும் கழுத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாரிமுத்துவை பழனி அரசு மருத்துவமனைக்கு சீட்டுக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு வழங்கும் அனுப்பி வைத்தனர். மேலும் கொடைக்கான காரணம் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சன்னதி வீதியில் அதிகாலையிலேயே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.