திண்டுக்கல் ; பழனியில் கேரள தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பல்லுரித்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் ரகுராம்(46) – உஷா(44) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில்,நேற்று பழனிக்கு வந்த இருவரும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
நேற்று அறைக்கு சென்றவர்கள் இன்று மாலை 5 மணி ஆகியும், அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அடிவாரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விடுதிக்கு வந்த போலீசார் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ரகுராம், உஷா ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் சிறிய விஷயத்திற்காக 10 பேர் கொண்ட நபர்கள் தங்களை நீதிமன்றம் வரை அழைத்துச் சென்றதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தங்களுடைய தற்கொலைக்கு இந்த 10 பேர் தான் காரணம் என்றும், கேரளாவில் உள்ள பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்களுடைய மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீதி கிடைக்க பாடுபட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
This website uses cookies.