தண்ணீரில் மூழ்கடித்து மாற்றுத்திறனாளிகளை கொடுமைப்படுத்திய சம்பவம் ; அதிர்ச்சி வீடியோ ; நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!

Author: Babu Lakshmanan
10 January 2024, 11:42 am

மாற்றுத்திறனாளிகளை தண்ணீரில் மூழ்கடித்து கொடுமை படுத்தி வீடியோ எடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காலை முதலே கனமழை பெய்தது. மழையின் காரணமாக பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் சாக்கடைகள், வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட துவங்கியது. இந்த நிலையில், புது ஆயக்குடி பகுதியில் மாற்றுத்திறனாளிகள் வசிக்கக்கூடிய வீட்டிற்கு முன்பாக மழை நீர் தேங்கியுள்ளது.

மழை நீரை அகற்ற கோரிக்கை விடும் நபர்கள் மாற்றுத்திறனாளி இளைஞர்களை கொடுமைப்படுத்தும் வகையில் தண்ணீரில் தள்ளி விட்டுள்ளனர். இதனால், செய்வது அறியாத தவித்த மாற்றுத்திறனாளி இளைஞர்கள், தண்ணீரிலிருந்து எழுந்து அருகே உள்ள வீட்டிற்குள் செல்லக்கூடிய காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

மாற்றுத்திறனாளிகளை கொடுமைப்படுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி