தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது செல்போனில் மும்முரப் பேச்சு… சர்ச்சையில் சிக்கிய பழனி நகராட்சி ஆணையர் : அரசு விழாவில் சலசலப்பு!

Author: Babu Lakshmanan
21 December 2023, 1:20 pm

பழனி எம்.எல்.ஏ கலந்து கொண்ட கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவின்போது பழனி நகராட்சி ஆணையர் பாலமுருகன் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்து கொண்டு இருந்த போது தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த காட்சி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியின் வளாகத்தில் பல்வேறு கட்டிடங்கள் 4 கோடி மதிப்பில் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில் குமார் கலந்து கொண்டார்.

பின்னர் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி துவங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்து மாணவிகள் பாடினர். அதனை தொடர்ந்து மாணவிகளுடன் சட்டமன்ற உறுப்பினர், ஆசிரியர்கள், கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து பாடிக்கொண்டு இருந்தனர். அப்போது, நகராட்சி ஆணையர் பாலமுருகன் நாட்டுப்பண்-ஐ மதிக்காமல் அலட்சியத்துடன் தொலைபேசியில் பேசி கொண்டு இருந்தார்.

பழனி நகராட்சி ஆணையரே தமிழ்தாய் வாழ்த்து பாடும் போது தொலைபேசியில் பேசி கொண்டு இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!