பழனி முருகன் கோவிலில் பெண்ணை கோவில் ஊழியர் தாக்கியதாகக் கூறப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த போது, திருக்கோவில் ஊழியர்கள் தனது மகளைத் தொட்டு தள்ளினார்கள் என ஈரோட்டு மாவட்டம் சித்தோடை சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவர் ஆடியா வெளியிட்டார்.
கடந்த 9ம் தேதி சாமி தரிசனம் செய்ய வரிசையில் வந்த போது, தன்னுடைய மகளை தொட்டு தள்ளினார்கள் என குற்றம்சாட்டி ஆடியோ வெளியிட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளது.
இதில், கடந்த 9ம் தேதி மாலை 6.39 மணியளவில் கருவறையில் உள்ள மூலவரை சாமி தரிசனம் செய்ய சம்பந்தப்பட்ட அந்த குடும்பத்தினர் வந்தபோது, கருவறையை அந்தப் பெண் தனது செல்போனில் வீடியோ எடுப்பதும், அதை திருக்கோவில் ஊழியர் சிவா என்பவர் தடுத்து எச்சரித்தும் தெளிவாக தெரிகிறது.
ஆனால் இந்த உண்மையை மறைத்து பெண்ணின் தந்தை தவறான செய்தியை பரப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பழனி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அடிக்கடி மூலவரை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விடுவதால் இதுபோல் பிரச்சனை ஏற்படுகிறது.
இதற்கு தீர்வாக பழனி கோவில் நிர்வாகம் ஏற்கனவே பக்தர்களிடம் செல்போனை வாங்கி வைக்க ஏற்பாடுகளை செய்து செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் வைத்திருந்தது. இதனால் திருப்பதியை போல் செல்போனை அனுமதி மறுக்கபட வேண்டும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.