வெள்ளி ஆட்டுக்கிடாவில் வள்ளி, தேவசேனாவுடன் முத்துக்குமார சுவாமியின் திருவீதி உலா. .. காவடி எடுத்து ஆட்டம் ஆடிய பக்தர்கள்.. பழனியில் பரவசம்!!

Author: Babu Lakshmanan
31 January 2023, 11:00 am

பழனி தைப்பூசத் திருவிழாவின் இரண்டாம் நாளில் முத்துக்குமார் சுவாமி, வள்ளி, தேவசேனாவுடன் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோவிலில் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து, வெள்ளி தேரோட்டமும், பிப்ரவரி நான்காம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் முத்துக்குமாரசாமி ஒவ்வொரு அலங்காரத்தில் வலம் வருவார்.

இதனை அடுத்து, நேற்று இரண்டாம் திருவிழாவில் முத்துக்குமாரசாமி, வள்ளி, தேவசேனா, வெள்ளி ஆட்டு கிடா வாகனத்தில் நான்கு ரத வீதியிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று தரிசனம் செய்தனர்.

https://player.vimeo.com/video/794372501?h=21da71fa80&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!