‘கந்தனுக்கு அரோகரா’ ; தைப்பூசத்தையொட்டி பழனியில் காவடியுடன் குவிந்த பக்தர்கள் ; அலகு குத்தி நேர்த்திக்கடன்!!
Author: Babu Lakshmanan19 January 2023, 2:17 pm
பழனியில் தைப்பூசத் திருவிழா மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள்கள் காவடிகள் எடுத்தும் ,அலகு குத்தியும் தரசினம் செய்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேக திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போதைலிருந்தே பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாலை அணிந்து, விரதம் இருந்து 3 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை பாதயாத்திரையாக வருகை தந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் கிரிவலம் பாதையில் அலகு குத்தியும், காவடிகள் எடுத்து ஆடியும், அரோகரா கோசங்கள் இட்டும், பக்தி பாடல்களை பாடியும், நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் தங்களது கலைப்பு தெரியாமல் இருக்க கோலாட்டம் ஆடியும் வருகின்றனர்.
மேலும், குழந்தை வரம் வேண்டி முருகப்பெருமானிடம் முறையிட்ட தம்பதியினர், குழந்தை பிறந்தவுடன், குழந்தையுடன் வந்த தம்பதியினர் கரும்புத் தொட்டிலில் குழந்தையை படுக்க வைத்து தங்களது தோளில் சுமந்து கிரிவல பாதையில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
கும்பாபிஷேக பணிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.