பழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழாவில் புதிய நடைமுறை ; இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Author: Babu Lakshmanan
4 October 2022, 7:58 pm

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவில் வழக்கத்திற்கு மாறான நடைமுறையில் ஈடுபடுவதாகக் கூறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கடந்த 26ஆம் தேதி காப்புக் கட்டுகளுடன் நவராத்திரி திருவிழா தொடங்கியது. நவராத்திரி முன்னிட்டு முக்கிய நிகழ்வான வன்னிகாசுரன் வதம் செய்யும் இன்று நடைபெறவுள்ளது.

இதனையடுத்து, அருள்மிகு சண்முகர் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் சென்று பராசக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சிக்காக புறப்பட்டபோது, பழனி ஆதீனம் புலிப்பாணி பாத்திர சுவாமிகள் கோவிலுக்கு உள்ளே சென்றார்.

அப்போது, தடுப்புகளை வைத்து புலிப்பாணி சுவாமிகளை உள்ளே விடாமல் அதிகாரிகள் தடுத்தனர். இது குறித்து கேட்டபோது அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் என்றும், எனவே உங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து, அங்கிருந்த இந்து முன்னனியினர் கோவில் நிர்வாகத்தை கண்டுபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பல நூறு ஆண்டுகளாக நவராத்திரி திருவிழாவின் போது சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க புலிப்பாணி சுவாமிகளுக்கே உரிமையுண்டு என்றும், ஆனால் இப்போது வேண்டுமென்றே கோவில் அதிகாரிகள் இடையூறு செய்வதாகவும் தெரிவித்தனர்.

மேலும், புலிப்பாணி சுவாமிகளுக்கு வழக்கமாக கண்காணிப்பாளரே மரியாதை செலுத்த வேண்டும் என்றும், ஆனால் தற்போது பேஸ்காரை அனுப்பி மரியாதை செய்யப்படுவது புலிப்பாணி சுவாமிகளை அவமதிக்கும் செயல் என்றும் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினடையும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். தொடர்ந்து சக்திவேல் வாங்கும் நிகழ்வுக்காக புறப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • வெட்கமே இல்ல? புது மருமகளை சக நடிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நாகார்ஜூனா!
  • Views: - 501

    0

    0