பழனி முருகன் கோவிலில் இணை ஆணையர் திடீர் ஆய்வு… மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை..!!
Author: Babu Lakshmanan19 June 2023, 4:42 pm
பழனி முருகன் கோவில் முடி காணிக்கை நிலையத்தில் இணை ஆணையர் ஆய்வு. மொட்டையடிக்க பக்தர்களிடம் பணம் பெற்றால் பணி நீக்கம் செய்யப்படுவர் என இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார் மாரிமுத்து. பழனி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான முடி காணிக்கை செலுத்தும் இடங்களை இணை ஆணையர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.

முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதும், சரவணா பொய்கை பக்தர்கள் குளிக்கும் இடத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்தார்.
அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் மொட்டை அடிக்க கட்டணம் வசூல் செய்வதில்லை, மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் பக்தர்களிடம் பணம் வசூல் செய்வதாக புகார்கள் வந்தால், அந்த நபர்கள் பணியிட நீக்கம் செய்வார் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், மொட்டை அடிப்பதற்காக இணைய வழியில் பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. அவற்றில் உள்ள இடர்பாடுகள் நீக்கப்பட்டும் எனவும் இணைஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.