பழனியில் களைகட்டிய பங்குனி உத்திர திருவிழா நிறைவுநாள் ; தங்கத்தேர் இழுத்து பக்தர்கள் வழிபாடு… விண்ணைப் பிளந்த ‘அரோகரா’ கோஷம்..!!

Author: Babu Lakshmanan
8 April 2023, 8:42 am

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு நாளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் கடந்த 29 ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா துவங்கி 10 நாட்கள் விமர்சையாக நடைபெற்றது.

பங்குனி உத்திர திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் கடந்த நான்காம் தேதி நடைபெற்றது. பங்குனி உத்திர விழாவின் நிறைவு நாளான நேற்று மலை மீது நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தங்கத்தேரில் வலம் வந்த முருகனை அரோகரா கோஷம் எழுப்பி பக்தர்கள் வணங்கினர்.

  • vijay is a comedian in politics statement by college student விஜய் ஒரு காமெடியன்- தவெக தலைவரை கண்டபடி விமர்சித்த கல்லூரி மாணவர்கள்…