பழனி அடிவாரத்தில் இன்று கடையடைப்பு போராட்டம்…. தைப்பூசத்திற்காக முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிப்பு

Author: Babu Lakshmanan
18 January 2024, 11:29 am

பழனி முருகன் கோவில் மலை அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து வர்த்தகர்கள் சங்கத்தினர் கடைகளை அடைத்து போராட்டததில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மலை அடிவார பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி திருத்தொண்டர் பேரவை ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார். அதில் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளையும் முறையாக அகற்றப்படவில்லை என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து இருந்தார்.

அதில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், அதனை கண்காணிக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு ஒன்றை அமைத்திருந்தார். இந்நிலையில் பழனி அடிவாரம் பகுதியில் தைப்பூச திருவிழாவும் நடைபெறவுள்ளதால் தினமும் ஆக்கிரமிப்பு அகற்ற பட்டு வருகிறது.

அடிவாரம் பகுதியில் வர்த்தகர்களை கஷ்டப்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் அடிவாரம் மற்றும் சன்னதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு கடை அடைப்பு போராட்டம் இன்று காலை 9 மணிக்கு துவங்கப்பட்டு ஒட்டுமொத்த வர்த்தகர்கள் ஒருங்கிணைந்து கடையடைத்து தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கை விடுப்பதாகவும், இது கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்து எந்த ஒரு தடையின்றி வர்த்தகம் செய்ய பரிசினை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

இதனிடையே, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் பழனி கோவிலுக்கு இன்று முதல் வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பேன்சி கடைகள், சாமி பட விற்பனை செய்யும் கடைகள் பாத்திரம் விற்பனை செய்யும் கடைகள் என ஏராளமான கடைகள் பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!