பழனி தைப்பூச தேரோட்டம் கோலாகலம் ; ஓங்கி ஒலித்த அரோகரா கோஷம்… ஆயிரக்கணக்கானோர் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு!

Author: Babu Lakshmanan
25 January 2024, 7:17 pm

பழனியில் தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். 

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கடந்த 19 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மலை அடிவாரத்தில் உள்ள நான்கு ரத வீதிகளில் நடைபெற்றது.   

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக முத்துக்குமாரசுவமி- வள்ளி தெய்வயானை சமேதராக‌ அலங்கரிக்கப்பட்ட தேரில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வருகிற 28 ம் தேதி இரவு தெப்பத்தேரோட்டமும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத்திருவிழா நிறைவடைகிறது.

தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ