பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா மாலை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளதையொட்டி, சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் விமர்சியாக நடைபெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.
பங்குனி உத்திர திருவிழா திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று மாலை 6:00 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. நாளை மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் நடைபெற உள்ளது.
பங்குனி உத்திரத் திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்திற்க்கு வருகை தந்துள்ளனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடிக்கு சென்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மலையடிவாரத்தில் பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து மேளதாளத்துடன் காவடி ஆட்டம் ஆடி திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.