கார் டயர் வெடித்து கோர விபத்து… இரு இளைஞர்கள் பரிதாப பலி ; நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது சோகம்..!

Author: Babu Lakshmanan
15 November 2023, 8:30 am

பழனி அருகே சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

திருச்சியைச் சேர்ந்த நண்பர்கள் ஆன கலைச்செல்வன் (27), கோபிநாதன் (28), அமீர் பாட்சா (26), அகமது அப்துல்லா (28), கோயல் நிஷாந்த் (26) ஐந்து பேரும், கேரளா மாநிலம் கொச்சிக்கு சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவில் சொந்த ஊரான திருச்சிக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

பழனி அருகே சத்திரப்பட்டி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே கோபிநாதன் மற்றும் கலைச்செல்வன் இருவர் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டு இருந்த இருவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி