பழனி முருகன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு.. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்கள் சுவாமி தரிசனம்!
Author: Babu Lakshmanan7 December 2022, 8:53 am
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சொக்கப்பனை கொழுத்தப்பட்டது. கார்த்திகை தீப நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றான காத்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 30ம்தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.
முக்கிய நிகழ்வான மகாதீபம் மற்றும் சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்வு ஏழாம் நாள் திருவிழாவான நேற்று மலைக்கோவில் பிராகரத்தில் நடைபெற்றது.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பின்னர், பனை ஓலைகளை கொண்டு செய்யப்பட்டிருந்த சொக்கப்பனையும் தீயிட்டு எரிக்கப்பட்டது.
கார்த்திகை தீப திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர் நடராஜன் தலைமையிலான கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.