பழனி முருகன் கோவில் பக்தர்களே… இது உங்களுக்கான செய்தி ; நாளை முதல் தைப்பூசம் வரையில்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

Author: Babu Lakshmanan
16 December 2023, 11:37 am

பழனி முருகன் கோவிலில் நாளை முதல் 32 நாட்களுக்கு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 32 நாட்களுக்கு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

நாளை ஞாயிற்றுக்கிழமை மார்கழி மாத பிறப்பையொட்டி ஆனந்த விநாயகர் சந்நிதி முன் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு மூலவர் சந்நிதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

மார்கழி மாதம் முழுவதும் காலையில் மூலவருக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறுவதால் அடுத்த 29 நாட்களும் அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்படுகிறது. பின்னர் தை முதல் தேதி பொங்கல் அதற்கு அடுத்த 2 நாட்கள் தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் வருவதால் தை மாதம் முதல் மூன்று நாட்களுமே அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்படுகிறது.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 507

    0

    0