பல வருடங்களாக ஆக்கிரமிக்கப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.. ரகசிய டீலிங் தடுக்கப்படுமா? அற்போர் இயக்கம் பரபரப்பு அறிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan12 December 2023, 7:50 pm
பல வருடங்களாக ஆக்கிரமிக்கப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.. ரகசிய டீலிங் தடுக்கப்படுமா? அற்போர் இயக்கம் பரபரப்பு அறிக்கை!
அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்ந்து பல வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டு வந்த காரணத்தால் சென்னையில் ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளத்தால் மக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டது வருகிறது.
தற்போது சென்னை முழுவதும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் டன் கணக்கில் அள்ளி செல்லப்படுகின்றன. இதை எல்லாம் அள்ளிக் கொண்டு போய் எங்கே கொட்டுவார்கள் தெரியுமா? அதே பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தான். இதற்காகவே 250 ஏக்கர் சதுப்பு நிலம் அரசாங்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கே குப்பையை கொண்டு போய் கொட்ட தனியாரிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உங்கள் பகுதியில் வெள்ளம் ஏற்பட என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள விருப்பமா? அதற்கான தீர்வுகளை கண்டறிந்து அரசாங்கத்திடம் கொடுத்து நிறைவேற்ற வைக்க நீங்க தயாரா? டிசம்பர் 16 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் அறப்போர் அலுவலகத்தில் நடைபெறும் நமக்கு நாமே கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு https://chat.whatsapp.com/DXRd4fn8OIp2MCr51zrVkr Chennai Flood Audit அறப்போர் whatsapp குழுவில் இணைந்து கொள்ளுங்கள். இவ்வாறு அந்த அறப்போர் இயக்கம் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறப்போர் இயக்கம் சார்பில் வெளியான மற்றொரு ட்வீட்டில் வேளச்சேரியில் ஏன் மழை வெள்ளம் வடியவில்லை என்பது குறித்து அறிவிக்கப்பட்டது. அது போல் மற்றொரு ட்வீட்டில் நீர்நிலைகளின் நில பயன்பாட்டை தனியாருக்கு சாதகமாக மாற்றிக் கொடுக்கும் சிஎம்டிஏ தடுத்து நிறுத்தப்படுமா? இதில் நடைபெறும் ரகசிய டீலிங் தடுக்கப்படுமா? உங்கள் பகுதியில் இது போல நீர்நிலைகளை அரசாங்கமே ஆட்டையை போட்டு தனியாருக்கு தாரை வார்க்கிறதா என்று எப்படி கண்டுபிடிக்கலாம்? என கேள்வி எழுப்பலாம்.
தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் மழை நீரை பள்ளிக்கரணையில் இருந்து பக்கிங்காம் கால்வாய்க்கு கொண்டு செல்லும் ஒக்கியம் மடுகு பகுதியின் முக்கியத்துவம் என்ன? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் நிர்வாகி ஜெயராமன் கள ஆய்வையும் நடத்தியுள்ளார்.