PAN INDIA படம் என்பது பந்தியில் வைக்கும் குலோப் ஜாமூன் மாதிரி : கோவையில் பிரபல திரையரங்குக்கு விசிட் அடித்த ஆர்ஜே பாலாஜி ”கலகல”!!

கோவை : ஓடிடி தளங்களும் வரவேற்கத்தக்க ஒன்று தான் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி யின் நடிப்பில் ஊர்வசி, சத்தியராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள வீட்ல விஷேசம் திரைப்படம், நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கோவை புரூக் பீல்டு மாலில் இத்திரைப்படம் திரையிடப்படுள்ளது.

இந்நிலையில் புரூக் பீல்டு மாலில் இத்திரைப்படத்தினை பார்த்த பொதுமக்களை படத்தின் கதாநாயகரும் இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி மற்றுமொரு இயக்குனரான சரவணன் ஆகியோர் சந்தித்து படத்தை குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் பொதுமக்களுடம் புகைப்படம் எடுத்து கொண்டனர்.மேலும் அதில் தெலுங்குபாளையத்தை சேர்ந்த அமுதா என்பவர் நாட்டாமை படத்திற்கு பிறகு இந்த படத்திற்கு தான் வந்துள்ளதாக தெரிவித்தார். அதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த அவர், அவரை செய்தியாளர் சந்திப்பிற்கு அழைத்து வந்து அருகில் அமரவைத்து கொண்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஆர்.ஜே.பாலாஜி நான் கோவையில் தான் ஆர்ஜே வேலையை துவங்கியதாக மகிழ்ச்சியுடம் தெரிவித்தார்.

300 கொலைகள், 500 கத்திக்குத்துகள் அவ்வாறெல்லாம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கின்ற சாத்வீகமான படம் என தெரிவித்தார். மேலும் பல்வேறு மக்கள் ஹிந்தி படத்தை காட்டிலும் மிக நன்றாக உள்ளதாக தெரிவித்தாகவும் கூறினார்.

மேலும் நானே நினைத்தாலும் வில்லன் கதாப்பாத்திரம் எழுத தெரியாது எனவும் அது வராது எனவும் கூறிய அவர், குழந்தைகள் எனது படத்திற்கு வருவதால் கொலை செய்வது போதை பொருட்கள் விற்பது போன்று நடிப்பதற்கு விருப்பம் இல்லை என தெரிவித்தார்.

மூக்குத்தி அம்மன் படத்திற்கு கிடைத்த வெற்றியை பார்த்து தான் இது போன்று குடும்ப படத்தை எடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும் ஆர்.ஆர்.ஆர், ஜேஜிஎப் போன்ற படங்கள் வருவதால் இது போன்ற படத்திற்கு மக்கள் விருப்பம் காட்ட் மாட்டோர்களோ என்ற பயம் இருந்ததாகவும் தற்போது அந்த பயம் இல்லை எனவும் தெரிவித்தார்.

PAN இந்தியா படங்களும் ஓட வேண்டும் இது போன்ற படங்களும் ஓட வேண்டும் எனவும் தெரிவித்தார். PAN இந்தியா படம் விருந்து பந்தியில் வைக்கும் குலோப் ஜாமூன் என்றால் இப்படத்தை பந்தியில் வைக்கும் மாங்காய் ஊருகாய் போல் பார்ப்பதாக கூறினார்.

தனது படிப்பு மற்றும் வேலையை சென்னையில் இருந்து வந்து கோவையில் துவங்கும் போது இருந்த தயக்கம் இருந்ததாகவும் ஆனால் கோவையை விட்டு போகும் போது மனவருத்தம் இருந்ததாகவும் கூறினார்.

திரைப்படத்திற்கு ஓடிடி வந்ததும் நல்லது தான் எனவும் தெரிவித்தார். சினிமா வில் எனக்கு நல்ல கதாப்பாத்திரங்கள் கிடைக்காததால் நாமே இப்படத்தை எடுக்கலாம் என எடுத்ததாக தெரிவித்தார்.

இதில் பேசிய மற்றொரு இயக்குநர் சரவணன் இது போன்ற படம் இளைஞர்களுக்கும் பிடித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மீண்டும் நயன்தாராவுடன் நடிக்க வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், அந்தந்த படத்திற்கு யார் ஏற்ற நடிகர் நடிகையோ அவர்களை தான் தேர்ந்தெடுக்க முடியும் என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…

10 hours ago

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…

வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…

11 hours ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

12 hours ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

12 hours ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

12 hours ago

This website uses cookies.