கோவை மாநகராட்சியுடன் இணையும் ஊராட்சி, பேரூராட்சிகள்.. புதியதாக இணையும் பகுதிகள் எது தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2024, 4:49 pm

கோவை மாநகராட்சி பல கிராம ஊராட்சிகள் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய வருவாய் மாவட்டம் என்றால் அது கோவைதான். 4,723 சதுர கிலோ மீட்டர் அளவு கெர்ண்ட கோவையில் பல கிராம ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

கோவை மாநகராட்சியுடன் குருடம்பாளையம் சோமையம்பாளையம், பேரூர் செட்டிபாளையம், கீரணத்தம், நீலாம்பூர், மயிலம்பட்டி, பட்டணம், வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம் சின்னியம்பாளையம், சீரப்பாளைய;ம ஆகிய ஊராட்சிகளும், மதுக்கரை நகராட்சி, இருகூர், பள்ளபாளையம், பேரூர், வெள்ளலூர் ஆகிய பேரூராட்சிகளும் இணைப்படுகின்றன.

இதையும் படியுங்க: கட்டிய மனைவியை கடத்திய பாஜக பிரமுகர்.. ரகசிய சந்திப்பால் வெளிச்சத்திற்கு வந்த கடத்தல்!

தற்போது 100 வார்டுகள் உள்ள கோரவை மாநகராட்சி, இந்த பகுதிகள் இணைக்கப்பட்ட பிறகு 150 முதல் 200 வார்டுகள் உள்ள மாநகராட்சியாக மாற உள்ளது.

இந்த வருட முடிவுக்குள் அல்லது ஜனவரி 2025க்குள் விரிவாக்க பணிகள் முடிவடையும் என கூறப்படுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ