பட்டாவுக்காக பறக்கும் லஞ்சம்.. ரூபாய் நோட்டுகளை எண்ணும் ஊராட்சி மன்ற தலைவர் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
11 April 2023, 6:44 pm

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா முன்னிலை கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்குட்பட்டது முன்னிலை கோட்டை ஊராட்சி. இந்த ஊராட்சியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அந்தோணியம்மாள். இவர் அதிமுகவில் இருந்து தற்போது திமுகவிற்கு மாறி உள்ளார்.

அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்களுக்கு பட்டா சிட்டா வழங்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டுள்ளனர். இதற்கு தலைவர் பணம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. பட்டாவிற்காக பலர் ஊராட்சி மன்ற தலைவரிடம் பணம் லஞ்சமாக கொடுத்தனர்.

அதில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம் வாங்குவது வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். பெண் ஊராட்சி மன்ற தலைவர் பட்டா வழங்க பணம் வாங்கியது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://player.vimeo.com/video/816539339?h=f59809fa4b&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?