‘அரசு நலத்திட்டங்களை உனக்கே தரேன்’… கிராமப் பெண்களை குறிவைத்து காமவெறியாட்டம்… ஊராட்சிமன்ற தலைவர் மீது புகார்..!!
Author: Babu Lakshmanan1 July 2023, 2:28 pm
வறுமையை பயன்படுத்தி கிராம குடும்பபெண்களிடம் காம லீலைகள் புரிந்த ஊராட்சி மன்ற தலைவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து வலைதளங்களில் கசிய விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சேமகோட்டை ஊராட்சியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், சேமகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம குடும்ப பெண்களிடம் அவர்களின் வறுமையை பயன்படுத்தி 100 நாள் வேலை வாங்கி தருவதாகவும், அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பெற்று தருவதாகவும் கூறி, அவர்களை தன் காமவெறிக்கு பயன்படுத்திக் கொண்டு உள்ளார் என்று கூறப்படுகிறது.
அந்தப் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும்போது அதை தனது செல்போனில் வீடியோ படம் எடுத்து வைத்துக்கொண்டு, தொடர்ந்து அந்த பெண்களை அழைத்து மிரட்டியதாகவும், அதற்காக அவர்கள் மறுத்ததால் அந்த வீடியோக்களை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
இதனால் சேமகோட்டை ஊராட்சி மக்களிடையே மிகுந்த பதற்றம் ஏற்பட்டு உள்ளது என்று வேல்முருகன் புகார் மனுவில் குறிப்பிட்டார்.
அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கடலூர் மாவட்ட குற்றப்புலனாய்வு காவல் துறையினர் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணனை தேடி வருகின்றனர். மேலும், இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர ஆதரவாளர் என்றும் அப்பகுதி மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.