‘வாடி, போடி-னு சொல்லி மிரட்டுறாங்க’… சாதிப் பெயரை சொல்லி திட்டுறாங்க.. அதிமுக ஊராட்சி மன்ற பெண் தலைவர் வேதனை!!

Author: Babu Lakshmanan
3 October 2022, 5:36 pm

கடலூர் : ஊராட்சி மன்ற தலைவரை சாதிய சொல்லி திட்டிய ஊராட்சி மன்ற துணைத் தலைவரை கைது செய்யக்கோரி விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தொட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவர், அக்கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பின்பு ஊராட்சி மன்ற தலைவி அதிமுக என்பதினாலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதினாலும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகளான ராமதாஸ், கிருஷ்ணன் ஆகியோர் எந்த பணியும் செய்ய விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சாதிய சொல்லி நா கூசும் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் அதிமுக ஊராட்சி மன்ற தலைவி வேதனை தெரிவித்துள்ளார்.

பணி செய்யப்பட்டதற்கான பில்லுக்கு உண்டான தொகைக்கு, ஊராட்சி மன்ற துணை தலைவர் கையொப்பம் இடாமல் புறக்கணித்து வருவதாகக் குற்றம்சாட்டிய ஊராட்சி மன்ற தலைவி செல்வமணி, சாதியை சொல்லி திட்டும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கைது செய்யக்கோரி விருத்தாச்சலம் ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?