பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா திடீர் நிறுத்தம் : காவல்துறை எதிர்ப்பால் கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2023, 11:29 am

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 67வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு 144 தடை உத்தரவு மாவட்டம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 67வது ஆண்டு சித்திரை திருவிழா இன்று துவங்கி (12.05.2023) முதல் 14.05.2023 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை 6 மணியில் இருந்து 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144-தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பிறப்பித்துள்ளார்.

இவ்விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 4 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 68 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2050 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் கோவிலுக்கு வர தடை ஏற்படுத்தியதை தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலய திருவிழாவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக விழா குழு தலைவர் முருகபூபதி தெரிவித்தார்.

  • RJ Balaji Apologizes to Sivakarthikeyan சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்.ஜே.பாலாஜி…எதற்குனு தெரியுமா..?
  • Views: - 621

    0

    0