கட்டுக்கடங்காத கூட்டம்… பழனியில் தீர்ந்து போன பஞ்சாமிர்தம் : பக்தர்கள் வைத்த டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan11 February 2025, 5:08 pm
முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட வருகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாவும் காவடிகள் எடுத்தும் பால்குடம் எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்க : சப்பைக்கட்டு கட்டாமல் பதவியில் இருந்து விலகுங்க… அமைச்சர் காந்திக்கு செக் வைக்கும் அண்ணாமலை!
இந்த நிலையில் பழனிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பஞ்சாமிர்தம் வாங்கி செல்வது வழக்கம். இதற்காக பழனி அறநிலைய துறை சார்பில் தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தம் பழனி முழுவதும் கிளைகள் பல இடங்களில் அமைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கூட்டம் அதிகம் காரணமாக முறையான ஏற்பாடு செய்யாததால் பழனி அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள் பலர் தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தம் வாங்காமல் அருகில் உள்ள தனியார் கடைகளில் பஞ்சாமிர்தம் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பஞ்சாமிர்தங்கள் தயார் செய்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்