பொறுத்தது போதும் பொங்கி எழுந்த ரிஷப் பந்த்…சூடுபிடித்த ஆடுகளம்..!
Author: Selvan4 January 2025, 2:33 pm
ருத்ர தாண்டவம் ஆடிய ரிஷப் பந்த்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் 5-வது போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது.
இன்றைய நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக இருந்த நட்ச்சத்திர பும்ராவுக்கு திடீர் உடல்நிலை பிரச்சனை காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அவரது உடல்நிலை குறித்த தகவல் தெரியாத நிலையில்,இந்திய அணி பேட்டிங் ஆட களத்திற்கு வந்தது,அப்போது அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால்,ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை அடித்து அசத்தினார்.இதனால் இந்திய அணி இந்த இன்னிங்சில் வலுவான இலக்கை ஆஸ்திரேலியா அணிக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஆஸி.வீரர் போலந்தின் அபார பந்து வீச்சில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
விராட் கோலி இந்த முறையும் ஜொலிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து பெவிலியன் திரும்பினார்.அதன் பின்பு களத்திற்கு வந்த ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸில் நிறைய பந்துகளை தன்னுடைய உடம்பில் வாங்கி காயம் அடைந்து போராடி 40 ரன்களை அடித்தார்,அதற்கு நேர்எதிராக இந்த தடவை முதல் பந்தை சிக்ஸர்க்கு அடித்து நான் பழைய மாதிரி திரும்ப வந்துட்டேன் டா என்று தன்னுடைய பேட்டால் பதில் அளித்தார்.
இதையும் படியுங்க: பும்ராவுக்கு திடீர் காயம்… தடுமாறும் இந்திய அணி…உலககோப்பை கனவு கேள்விக் குறியா..?
அதன் பின்பு அவர் ஆடிய ஒவ்வொரு பந்தும் மைதானத்தில் நாலா புறமுமும் பறந்து சென்றது,ஆஸ்திரேலியா வீரர்கள் என்ன செய்வதுனு தெரியாமல் T-20 பீல்டிங் செட்டப் செய்தார்.அப்போதும் பந்த் ருத்ர தாண்டவம் ஆடி மைதானத்தில் இருந்த ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
அவர் எல்லா பந்துகளையும் அடிக்க முயற்சி செய்து வந்த நிலையில் கம்மின்ஸ் வீசிய பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 61 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.இதனால் பெருமூச்சு விட்ட ஆஸ்திரேலியா வீரர்கள் ஆட்டத்தை அவர்கள் பக்கம் மறுபடியும் இழுத்து பிடித்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 2ஆம் நாள் ஆட முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.நாளைய நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எவ்வளவு ரன்களை இலக்காக கொடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.