தங்கம் விலை தினமும் ஒரு விலை என்ற அடிப்படையில், ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்வை நோக்கியே தங்கம் விலை பயணித்தது.
இதனால் கடந்த மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரம், ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்ற நிலையை கடந்து இருந்தது. இந்த நிலையில் தங்கத்தின் இறக்குமதி வரியில் மாற்றம் இருக்கலாம் என கருதியதால், தங்கத்தை பலரும் இருப்பு வைக்கத் தொடங்கினார்கள்.
இதனால் கடந்த மாதம் 29, 30-ந்தேதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதன் விலை சற்று குறைந்து இருந்தது. நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று காலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.43,800க்கு விற்பனையாகிறது.
ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.5,475க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ1.30 உயர்ந்து ரூ77.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பால் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. கொரோனா காலத்தில் 2020-ல் ஆகஸ்ட் 70-ம் ஹ்டேதி ஒரு சவரன் ரூ.43,360 ஆக உயர்ந்திருந்ததே உச்சமாக இருந்தது.
2020 ஆக்ஸ்ட் 7-ம் தேதி ஒரு கிராம் அதிகபட்சமாக ரூ.5,420க்கு விற்பனையானது. ‘மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியில் மாற்றம் செய்யப்படவில்லை.
இதனால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் பார்வை சென்றதன் விளைவால், தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் விலையில் அதிரடி மாற்றம் இருக்கும்’ என்று தங்க வியாபாரிகள் கூறுகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.