வயிறு வலியோடு அலறிய 9ஆம் வகுப்பு மாணவி.. ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2025, 8:05 pm

ஆந்திர மாநிலம் அனகபள்ளி மாவட்டத்தில் வத்தடி கிராமத்தில் என்.டி.எஸ் எனும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் பிரசாத் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் கடும் வயிற்றுவலி ஏற்பட்டு சிறுமி வீட்டிற்குச் சென்று தனது பெற்றோரிடம் நடந்த கொடுமையைப் பற்றிக் கூறினாள். இதனால் கோபமடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் சாலைக்கு இழுத்து வந்து மின் கம்பத்தில் கட்டி வைத்து உதைத்தனர்.

இதையும் படியுங்க: தர்காவில் பன்றியை வெட்டினால் ஏற்றுக்கொள்வார்களா? கொளுத்தி போடும் ஜான் பாண்டியன்..!!

அப்போது ​​ தனக்கு எதுவும் தெரியாது என்று கூற முயன்றார். பின்னர் சிறுமியின் பெற்றோர் ஆசிரியரிடம் குழந்தை எல்லாவற்றையும் சொல்லிவிட்டதாகவும், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறி தாக்கி பள்ளியில் பெண் மாணவிகளின் பாதுகாப்புப்பற்றி கவலையாக இருப்பதாகவும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.

Slaps to School Teacher after assualted Student

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியரை பிடித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!
  • Leave a Reply