‘நகையைத் திருடினியா திருட்டு****..’ சிறுமியை தனியாக மிரட்டிய எஸ்ஐ? பெற்றோர் பரபரப்பு புகார்!

Author: Hariharasudhan
5 December 2024, 11:55 am

விழுப்புரத்தில் சிறுமி உள்பட அவரது குடும்பத்தினரை காவல் நிலையத்தில் வைத்து எஸ்ஐ மிரட்டியதாக பெற்றோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மேல்அருங்குணம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவர், தனது மகளை தற்கொலைக்குத் துண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில், “எனது 16 வயது இளைய மகள், அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், சுதா என்பவர் மகளிர் குழுத் தலைவியாக உள்ள நிலையில், அந்த குழுவில் நான் உறுப்பினராக இருக்கிறேன். அவரிடம், நான் மாதந்தோறும் பணம் செலுத்தும் புக் இருந்ததால் நான் பலமுறை கேட்டு வந்தபோது அவர் கொடுக்கவில்லை. இந்த நிலையில், கடந்த நவம்பர் 26ஆம் தேதி இரவு சுமார் 7.30 மணிக்கு, வேணுகோபால் என்பவர் அங்கு பால் வாங்கி விற்பனை செய்து வருகிறார்.

Parents complaint against police si

எனவே, நான் என் மகளை பால் வாங்கிக் கொண்டு மகளிர் புக்கை வாங்கி வா எனச் சொல்லி அனுப்பி வைத்தேன். இதன்படி என் மகள் சுதா வீட்டிற்குச் சென்று அக்கா, அக்கா என்று கூப்பிட்டுக்கொண்டே உள்ளே சென்று உள்ளார். அப்போது, சுதாவின் கணவர் ஐய்யனார், பின்பக்கத்திலிருந்து வந்து மிகவும் இழிவாக எனது மகளை திட்டி, என்னடி வீட்டுக்குள்ளே வந்து நகை திருடப் போறியா என்று சொல்லி, கையைப் பிடித்து இழுத்து, இடுப்பில் கையை வைத்து, தகாத முறையில் நடந்தது மட்டுமல்லாமல், சுவரின் மீது தள்ளி, கீழே விழுந்தவளின் முடியைப் பிடித்து தூக்கி, கையை பின்பக்கம் முறுக்கி பிடித்துக்கொண்டு, மனைவியை கூப்பிட்ட உடனே அங்கிருந்த சம்பத், ராஜகோபால், சுதா ஆகியோர் கும்பலாக சேர்ந்து என் மகளை அடித்து, நகையை நீதான் வந்து திருடிச் சென்றாயா திருட்டு நாயே என்று சொல்லி அடித்தார்கள்.

இதையும் படிங்க: பழுதாகும் அரசு மருத்துவமனை ஜெனரேட்டர்கள்.. மீண்டும் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை.. இபிஎஸ் கடும் விமர்சனம்!

இதுகுறித்து எனக்கு தகவல் தெரிந்து ஓடிச் சென்று பார்த்தபோது, அவர்கள் அனைவரும் சுற்றி நின்று என் மகளை மிரட்டி அடித்தார்கள். நான் தடுத்து வீட்டிற்கு அழைத்து வந்து, என் மகள் அழுவதை சமாதானம் செய்து, தூங்கவைத்துவிட்டு மறுநாள் (நவ.17) காலை அனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இந்தப் புகாரை காவல் உதவி ஆய்வாளர் மருது என்பவர் வாங்க மறுத்துவிட்டு, உங்கள் மீதும் உங்கள் மகள் மீதும் 4 சவரன் நகை திருடிவிட்டதாக புகார் உள்ளது. எனவே, ஒழுங்காக மாலை 3 மணிக்கு விசாரணைக்கு வரச் சொன்னார்கள்.

நானும், என் மகள், என் கணவர் ஆகியோர் சென்றோம். அப்போது காவல் உதவி ஆய்வாளர் மருது, என் மகளை தனி அறையில் வைத்து “ஏய் திருட்டு நாயே ஒழுங்கா திருடியதை ஒத்துக்கோ, இல்லையென்றால் உன்னையும், உன் அம்மா, அப்பா மூன்று பேர் மீதும் திருட்டு கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவேன். நீ அனந்தபுரம் ஸ்கூலுக்கே படிக்க வர மாட்டேன்”னு மிரட்டிவிட்டு வந்து, என்னைப் பார்த்து ஏய் “என்னடி நீயும், உன் மகளும் நகை திருடிவிட்டு மறைக்கிரிங்களா? என என்னையும் மிரட்டிவிட்டு, நாளை காலையில் நகை எடுத்து வந்து கொடுக்கல உங்கள் ஒழிச்சிடுவேணு” மிரட்டி எங்களை அனுப்பி வைத்தார்.

Jewel theft false case to girl in Villupuram

நானும், என் மகளும் வீட்டிற்கு வந்து இரவு முழுக்க அழுதுகொண்டு இருந்தோம். அந்த பயத்தினாலும், என் மகள் எந்த நகையும் திருடவில்லை என்று அழுது புலம்பிக்கொண்டு சாப்பிடாமல் படுத்துக் கொண்டார். நாங்களும் மன உளைச்சலில் படுத்துவிட்டோம். பின்னர், அன்று இரவு சுமார் 10.30 மணிக்கு என் மகள் கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு, எங்கள் வீட்டில் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்தார்.

அந்த சத்தம் கேட்டு எழுந்து பார்த்து அலறி ஓடிப்போய் தூக்கி, கயிற்றை அறுத்து கிழே இறக்கி ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு, அதன் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, பிறகு இறந்துவிட்டதாக நாங்கள் நினைத்து, உறவினர்கள் அனைவருக்கும் தெரிவித்தோம். பிறகு, இரண்டு நாள் கழித்து தான் என் மகள் கண்விழித்தார். எனவே, என் மகளை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் எனது மகள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்” எனத் தெரிவித்து உள்ளார். .

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 214

    0

    0