மகனுக்கு புத்துயிர் கொடுத்த பெற்றோர்கள்.. உடல் உறுப்புகள் தானம் : அரசு மரியாதை செலுத்தி ஆட்சியர் நெகிழ்ச்சி!
விபத்தில் உயிரிழந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி தனது மகனுக்கு மறு உயிர் அளிக்கும் விதமாகவும் பல்வேறு உயிரை காக்கும் விதமாகவும் பெற்றோர்கள் செய்திருக்கும் சம்பவம் சோகம் கலந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதி அருகே செயல்பட்டு வரும் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதி அன்று வரகூர் புதூர் கிராமத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் பரத்(16) என்பவர் அடுக்கம்பாறை பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்த நிலையில் பரத் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்த நிலையில் பரத்தின் பெற்றோர்களான சிவப்பிரகாசம், சித்ரா ஆகியோர் தாமாக முன்வந்து மூளைச்சாவு அடைந்துள்ள தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த பரத்தின் உடலில் இருந்து வடபழனி காவேரி மருத்துவமனைக்கு (லங்ஸ்), அயனம்பாக்கம் அப்போலோ மருத்துவமனைக்கு (லிவர்) ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கு இடது (கிட்னி) போளூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வலது (கிட்னி) என உடல் உறுப்புகள் தானமாக எடுக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது
விபத்தில் உயிரிழந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி தனது மகனுக்கு மறு உயிர் அளிக்கும் விதமாகவும் பல்வேறு உயிரை காக்கும் விதமாகவும் பெற்றோர்கள் செய்திருக்கும் சம்பவம் சோகம் கலந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
This website uses cookies.