நாடாளுமன்ற தேர்தல்.. கோவையில் காவலர்களுக்கான தபால் வாக்கு பதிவு செய்யும் பணி நிறைவு!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2024, 6:52 pm

நாடாளுமன்ற தேர்தல்.. கோவையில் காவலர்களுக்கான தபால் வாக்கு பதிவு செய்யும் பணி நிறைவு!

வரும் 19-ம் தேதி மக்களவை தேர்தலை ஒட்டி கோவையில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தும் நிகழ்வு இன்றும்,நாளையும் ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து கோவை,பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்டவர்கள் கோவை உப்பிலிபாளையம் போலீஸ் சமுதாயக்கூடத்திலும் மற்ற தொகுதிகளுக்குட்பட்டவர்கள் அதற்கு எதிரேயுள்ள சிஎஸ்ஐ பள்ளியிலும் வாக்களிக்க மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டும் காவலர்கள் நேரில் வந்து அஞ்சல் வாக்கு செலுத்தி விட்டு செல்கின்றனர். வாக்குப்பதிவானது காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!