படிச்சது ஹோட்டல் மேனேஜ்மென்ட்.. PART TIME கஞ்சா சப்ளை : பெங்களூருவில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு பார்சல்.. இளைஞர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2022, 9:22 pm

பெங்களூரில் இருந்து ரயில் மூலம் குட்கா கொண்டு வந்து விற்பனை செய்த நபரை சென்னை கொளத்தூரில் கைது செய்தனர்.

சென்னை கொளத்தூர் ஜி.கே.எம் காலணியில் ஒரு வீட்டில் குட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கொளத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி 42வது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொளத்தூர் போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் பண்டல் பண்டலாக முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ் குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அந்த வீட்டில் பொருட்களை பதுக்கி வைத்திருந்த சதீஷ்குமார் (வயது 31) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களைக் கொண்டு வந்து இங்கு உள்ள சிறு கடைகளுக்கு டெலிவரி செய்து விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்த கொளத்தூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

  • good bad ugly movie special screening for ladies பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…