விஜய் அரசியலில் ஹீரோவா இருக்கனும்னா இதச் செய்யனும்.. பார்த்திபன் ஓபன் டாக்!

Author: Hariharasudhan
26 November 2024, 6:20 pm

ஆளும்கட்சியை எதிர்த்தால்தான் அரசியலில் ஹீரோவாக முடியும் என விஜயின் அரசியல் நிலைப்பாடு குறித்து பார்த்திபன் கூறியுள்ளார்.

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற அலுவலகத்தில், முதலமைச்சர் ரங்கசாமியை நடிகர் பார்த்திபன் இன்று (நவ.26) சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைத்து அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், புதுச்சேரி சுற்றுலா மேம்பாடு குறித்த படத்தை புதுச்சேரி அரசு தயாரித்தால், தான் இயக்கத் தயாராக உள்ளதாகவும் முதல்வரிடம் கூறினார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், “தற்போது தெலுங்கு, மலையாளப் படங்களில் நான் நடித்து வருகிறேன். புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சி பெற்று வரும் நிலையில், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்புக்கான கட்டணத்தைக் குறைத்திருப்பது பாராட்டுக்குரியது.

கரோனா காலத்தால் உயர்த்தப்பட்ட படப்பிடிப்புக் கட்டணத்தை 28 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாகவும், தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்புக்கு 18 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாகவும் குறைத்து உள்ளனர். இதனை தமிழக அரசும் செயல்படுத்தவேண்டும். நல்ல திரைப்படத்தை மோசமான விமர்சனத்தால் தோல்வியடைய வைப்பது சரியல்ல” என்றார்.

தொடர்ந்து, தனுஷ் – நயன்தாரா இடையேயான மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தனுஷ், நயன்தாரா மோதலை பார்வையாளனாகவே பார்த்து ரசிக்கிறேன். நான் பார்வையாளர் மட்டும் தான். அது, அவரவர் தனிப்பட்ட விருப்பம். பெண்களுக்கு முன்பை விட தற்போது பாதுகாப்பு உள்ளது” எனக் கூறினார்.

AR Rahman divorce

தொடர்ந்து, ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரத்து குறித்து கேள்வி எழுப்பியபோது, “தமிழ் திரைப்படக் கலைஞர்களிடையே விவாகரத்து அதிகரித்திருப்பது கவலைக்குரிய ஒன்று. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இசை தவிர எதுவும் தெரியாது. நல்ல மனிதர் என அவர் மனைவி தந்த சான்றிதழை தவிர வேறு யாரும் தந்துவிட முடியாது. குடும்பம் என்று இருந்தால் சென்சிடிவ் இருக்கும், அதை பெரிதுபடுத்தி இருக்கக்கூடாது” எனத் தெரிவித்தார்.

மேலும், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து கேட்டதற்கு, “தமிழகத்தில் பேச்சு மூலமே அரசியலில் வெற்றி பெற்று வருகின்றனர். தற்போது நடிகர் விஜய் பேச்சு வரவேற்கத்தக்கது. வெளிநாடுகளில் அரசியல் பேச்சு என்பது குறைவு. ஆனால், தமிழகத்தில் அரசியலில் சுவாராஸ்யமான பேச்சுகளின் மூலமே பதவிக்கு வந்துள்ளனர்.

இதையும் படிங்க: கோலிவுட்டுக்கு டாடா..! ஹாலிவுட்டை கலக்க போகும் பிரபல காமெடி நடிகர்…

நடிகர் விஜய், நடிகர் சீமான் ஆகியோரின் பேச்சு வெவ்வேறு வகையில் பாராட்டத்தக்கவையே. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானது அல்ல. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரரும் ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியல் நடத்தினார்.

ஆளும்கட்சியை எதிர்த்தால்தான் அரசியலில் ஹீரோவாக முடியும். அரசியலில் ஆர்வம் உண்டு. யாரையும் நான் சார்ந்து இருக்கமாட்டேன். எனக்கும் அரசியல் கட்சி தொடங்க ஆசை இருப்பதால், எதிர்காலத்தில் கட்சி தொடங்குவேன்” எனக் கூறினார்.

  • Divya Bharathi latest photoshoot கவர்ச்சியில் மின்னும் நடிகை திவ்ய பாரதி…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 115

    0

    0