ஆளும்கட்சியை எதிர்த்தால்தான் அரசியலில் ஹீரோவாக முடியும் என விஜயின் அரசியல் நிலைப்பாடு குறித்து பார்த்திபன் கூறியுள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற அலுவலகத்தில், முதலமைச்சர் ரங்கசாமியை நடிகர் பார்த்திபன் இன்று (நவ.26) சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைத்து அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், புதுச்சேரி சுற்றுலா மேம்பாடு குறித்த படத்தை புதுச்சேரி அரசு தயாரித்தால், தான் இயக்கத் தயாராக உள்ளதாகவும் முதல்வரிடம் கூறினார்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், “தற்போது தெலுங்கு, மலையாளப் படங்களில் நான் நடித்து வருகிறேன். புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சி பெற்று வரும் நிலையில், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்புக்கான கட்டணத்தைக் குறைத்திருப்பது பாராட்டுக்குரியது.
கரோனா காலத்தால் உயர்த்தப்பட்ட படப்பிடிப்புக் கட்டணத்தை 28 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாகவும், தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்புக்கு 18 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாகவும் குறைத்து உள்ளனர். இதனை தமிழக அரசும் செயல்படுத்தவேண்டும். நல்ல திரைப்படத்தை மோசமான விமர்சனத்தால் தோல்வியடைய வைப்பது சரியல்ல” என்றார்.
தொடர்ந்து, தனுஷ் – நயன்தாரா இடையேயான மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தனுஷ், நயன்தாரா மோதலை பார்வையாளனாகவே பார்த்து ரசிக்கிறேன். நான் பார்வையாளர் மட்டும் தான். அது, அவரவர் தனிப்பட்ட விருப்பம். பெண்களுக்கு முன்பை விட தற்போது பாதுகாப்பு உள்ளது” எனக் கூறினார்.
தொடர்ந்து, ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரத்து குறித்து கேள்வி எழுப்பியபோது, “தமிழ் திரைப்படக் கலைஞர்களிடையே விவாகரத்து அதிகரித்திருப்பது கவலைக்குரிய ஒன்று. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இசை தவிர எதுவும் தெரியாது. நல்ல மனிதர் என அவர் மனைவி தந்த சான்றிதழை தவிர வேறு யாரும் தந்துவிட முடியாது. குடும்பம் என்று இருந்தால் சென்சிடிவ் இருக்கும், அதை பெரிதுபடுத்தி இருக்கக்கூடாது” எனத் தெரிவித்தார்.
மேலும், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து கேட்டதற்கு, “தமிழகத்தில் பேச்சு மூலமே அரசியலில் வெற்றி பெற்று வருகின்றனர். தற்போது நடிகர் விஜய் பேச்சு வரவேற்கத்தக்கது. வெளிநாடுகளில் அரசியல் பேச்சு என்பது குறைவு. ஆனால், தமிழகத்தில் அரசியலில் சுவாராஸ்யமான பேச்சுகளின் மூலமே பதவிக்கு வந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோலிவுட்டுக்கு டாடா..! ஹாலிவுட்டை கலக்க போகும் பிரபல காமெடி நடிகர்…
நடிகர் விஜய், நடிகர் சீமான் ஆகியோரின் பேச்சு வெவ்வேறு வகையில் பாராட்டத்தக்கவையே. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானது அல்ல. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரரும் ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியல் நடத்தினார்.
ஆளும்கட்சியை எதிர்த்தால்தான் அரசியலில் ஹீரோவாக முடியும். அரசியலில் ஆர்வம் உண்டு. யாரையும் நான் சார்ந்து இருக்கமாட்டேன். எனக்கும் அரசியல் கட்சி தொடங்க ஆசை இருப்பதால், எதிர்காலத்தில் கட்சி தொடங்குவேன்” எனக் கூறினார்.
பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…
தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
This website uses cookies.