‘நானே வருவேன்’ படத்தை சூசகமாக கலாய்த்த பொன்னியின் செல்வன் நடிகர்..! அதிர்ச்சியில் சக நடிகர்கள்..!
Author: Vignesh30 September 2022, 10:00 am
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் பார்த்திபன் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.
மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த மணிரத்னத்திற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
மேலும் பார்த்திபன், பிரபு, ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் பிரஸ் மீட் னென்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர்கள் இப்படத்தின் அனுபவம் பற்றி பேசினர். இதைத்தொடர்ந்து நடிகர் பார்த்திபன் பேசியது தான் தற்போது வைரலாகி வருகின்றது.
அதாவது அவர் பேசுகையில், நான் இன்று தஞ்சைக்கு செல்வதாக இருந்தேன். அங்கே பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க போகின்றேன். அதன் காரணமாக இன்று நடைபெற்று வரும் பிரஸ் மீட்டில் என்னால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இருப்பினும் நானே வருவேன், நானே வருவேன் என அடம்பிடித்து வந்துள்ளேன் என்றார் பார்த்திபன். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தோடு தனுஷின் நானே வருவேன் படமும் வெளியாகி இருப்பதால் பார்த்திபன் இவ்வாறு பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.