கேப்டனுக்காக ஒன்றுகூடிய கட்சிகள்… மறைந்த விஜயகாந்த்துக்காக தேமுதிகவுடன் திமுக, அதிமுக இணைந்து ஊர்வலம்!!
Author: Udayachandran RadhaKrishnan2 January 2024, 9:42 pm
கேப்டனுக்காக ஒன்றுகூடிய கட்சிகள்… மறைந்த விஜயகாந்த்துக்காக தேமுதிகவுடன் திமுக, அதிமுக இணைந்து ஊர்வலம்!!
மறைந்த தேமுதிக தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திமுக, தேமுதிக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற மௌன ஊர்வலம் நடைபெற்றது .
மறைந்த தேமுதிக தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து திமுக ,தேமுதிக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி மற்றும் வர்த்தகர் சங்கம் சார்பில் மௌன ஊர்வலம் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி. கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் பேரணி கடைவீதி வழியாக நேதாஜி சாலை கீழவீதி வரை சென்று நிறைவடைந்தது.