தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் : திருச்சியில் தொடரும் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றும் பணி…

Author: kavin kumar
29 January 2022, 2:29 pm

திருச்சி : திருச்சியில் அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றும் பணிகளும், தலைவர்களின் புகைப்படங்களை மறைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கட்சியினரின் விளம்பர போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களை அகற்றும் பணி தமிழகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்திலும் தேர்தல் விதிமுறைப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கட்டிட சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி மற்றும் சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் அரசியல் கட்சி சம்பந்தமான போஸ்டர்கள் மற்றும் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பதாகைகள் அகற்றும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

  • Kanguva movie OTT date announcement 100 கோடி கொடுத்த ஓடிடி..! தியேட்டருக்கு டாடா காட்டிய “கங்குவா”
  • Views: - 2285

    0

    0