நடக்கும் போது ஜீன்ஸ் பேன்ட்டில் கேட்ட விசித்திரமான சத்தம்.. ₹42 லட்சமா? நூதன திருட்டு : விமான நிலையத்தில் சிக்கிய பயணி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2024, 7:58 pm

நடக்கும் போது ஜீன்ஸ் பேன்ட்டில் கேட்ட விசித்திரமான சத்தம்.. ₹42 லட்சமா? நூதன திருட்டு : விமான நிலையத்தில் சிக்கிய பயணி!!

சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வரும் பயணி ஒருவர் சட்ட விரோதமாக நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகள் உடைமைகளை சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட பயணி ஒருவரின் உடமைகளை சோதனை மேற் கொண்டனர்.

அப்போது அந்த நபர் தனது உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் பேண்டில் பேஸ்ட் வடிவில் 683 கிராம் மதிப்புடைய தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.42 லட்சத்து 69 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர்ந்து அந்த பயணியிடம் யாருக்காக நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்தார் என அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • goundamani shout actors in shooting spot ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…
  • Close menu